மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?


Hiphop tamizha Meesaya murukku 2 first review: ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது; படம் எப்படி உள்ளது என்பதை இந்த முதல் விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.



மீசைய முறுக்கு



பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு. தன்னுடைய வாழ்க்கையை வைத்து இப்படத்தை எடுத்திருப்பார். 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? | Meesaya Murukku 2 Movie First Review


மீசைய முறுக்கு 2


முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 9 வருடங்களுக்கு பின் மீசைய முறுக்கு 2 திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தையும் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹர்ஷத் கான், சைத்ரா அச்சர், கெத்திகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், கருணாஸ், பாபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 25-ஆம் தேதி மீசைய முறுக்கு 2 திரையரங்குகளில் வெளியாகிறது.

மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? | Meesaya Murukku 2 Movie First Review

இந்த நிலையில், மீசைய முறுக்கு திரைப்படத்தை பார்த்த கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஒருவர் தனது X பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.



முதல் விமர்சனம்

“நேற்று இரவு மீசைய முறுக்கு 2 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது; படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹிப் ஹாப் தமிழாவின் நடிப்பு அபாரம் மற்றும் பாடல்களும் மிக சிறப்பாக இருந்தன. “கலைவாணியே” பாடல் மனதை தொட்டுவிட்டது. முதல் பாதி இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது; இரண்டாம் பாதி உணர்ச்சிகரமான தருணங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, தந்தை-மகன் இடையிலான உறவை மிக அழகாக காட்சியமைக்கப்பட்டு, பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கிறது. ரம்யா ரங்கநாதனுக்கு இதில் வலிமையான கதாபாத்திரம் கிடைத்துள்ளது, பாராட்டுகள். மீசைய முறுக்கு 2
திரைப்படம் தமிழகம் முழுவதும் நிச்சயம் ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்” என கூறியுள்ளார்.

மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? | Meesaya Murukku 2 Movie First Review



இவருடைய இந்த விமர்சனத்தின் மூலம் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 25-ஆம் தேதி ரசிகர்கள் இப்படத்திற்கு என்ன விமர்சனம் தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *