It’s A Medical Miracle (மலையாளம்): திரை விமர்சனம்


ஷராப் உதீன், சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள It’s A Medical Miracle மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

It

கதைக்களம்



ரூபன் (சங்கீத் பிரதாப்) சாலை விபத்தில் சிக்கியதில் கோமா நிலைக்கு செல்கிறார். அவரை நர்ஸ் சூசனா நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

அதனால் ரூபனின் ஆரா சூசனா மீது ஈர்ப்புக்கொள்ள 2 ஆண்டுகள் நகர்கிறது.

ஆனாலும் ரூபனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.

இதன் காரணமாக அவரது தாய் மகனை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்கின்றனர்.

இது தெரிந்து கடைசியாக ஒருமுறை ரூபனைப் பார்க்கலாம் என்று சூசனா செல்கிறார்.

It

அவர் அறையைவிட்டு திரும்பும்போது ஒரு விஷயம் நடக்க ரூபன் கோமாவில் இருந்து எழுகிறார்.

ஆனால், அவருக்கு தூரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் விழும் சத்தம் கூட அதீமாக கேட்கும் திறன் வந்துவிடுகிறது.

அதனை ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தும் முறையை பயிற்சி செய்யும் ரூபன், கான்ஸ்டபிள் சூரஜ் உடன் சேர்ந்து ஒரு குழந்தைக் கடத்தலை தடுக்கிறார்.



இதற்கிடையில் மாஸ்க்மேன் என்ற மர்ம நபர் சிலரை சித்ரவதை செய்து வருவது தெரியவருகிறது. அந்நபரினால் உள்துறை அமைச்சர் மகளின் கர்ப்பம் கலைய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

அந்த மாஸ்க்மேன் யார்? ரூபன் தனது சக்தியை வைத்து அவரை எப்படி கண்டுபிடித்தார்? என்பதே மீதிக்கதை.

It

படம் பற்றிய அலசல்



காமெடி, துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சங்கீத் பிரதாப் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது.

அதேபோல் பிரேமலு படத்தில் மமிதாவின் தோழியாக நடித்திருந்த அகிலா பார்கவன் ஹீரோயினாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ளார்.



ஹீரோவுக்கு கிடைக்கும் சக்தி; அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்வார் என்ற வழக்கமான லைன் ஆக இருந்தாலும், காட்சியமைப்புகளில் சுவாரஸ்யமாக படத்தை கொண்டு செல்கிறார் இயக்குநர்.

வில்லன் கதாபாத்திரம் ஒவ்வொரு சம்பவம் செய்த பின்னரும், ஏன் அதை செய்தார் என்ற சிறு பிளாஷ்பேக்கை காட்டியதும், அதில் சில யூகிக்க முடியாத வகையில் இருந்ததும் சூப்பர்.

It



முதல் 15 நிமிடங்களுக்கு பின் ஜாலியான படமாக நகரும் திரைக்கதை, வில்லனின் என்ட்ரிக்கு பின் திரில்லர் மோடில் பயணிக்கிறது.

காமெடி, எமோஷன், ரோமன்ஸ், ட்விஸ்ட் என எல்லா ஏரியாவிலும் இயக்குனர் ஷியாமின் கிரீஷ் கலக்கியிருக்கிறார்.

கதைக்கு ஏற்ற தேர்வாக ஹீரோ சங்கீத் மற்றும் ஹீரோயின் அகிலா சிறப்பாக நடித்துள்ளனர்.

எமோஷனல் காட்சிகளில் சங்கீத் அதிக ஸ்கோர் செய்துள்ளார்.

ஷராப் உதீன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாடி லேங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும் அட்டகாசம் செய்துள்ளார் என்றே கூறலாம்.

நான்கு பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றி கதை நகர்ந்தாலும், எங்குமே சலிப்பு ஏற்படாவண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

It

முஜீப் மஜீத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை படத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. படத்தை ஸ்டைலிஷான மேக்கிங்கில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் அகில் சேவியர்.

ராகேஷ் சேருமாதத்தின் படத்தொகுப்பும், VFX-வும் வேறொரு தளத்திற்கு படத்தை கொண்டு சென்றுள்ளது.

க்ளாப்ஸ்



  • நடிகர்கள்


  • இசை மற்றும் ஒலிக்கலவை


  • திரைக்கதை


  • ஸ்டைலிஷ் மேக்கிங்



பல்ப்ஸ்



  • பெரிதாக ஒன்றுமில்லை




மொத்தத்தில் இந்த It’s A Medical Miracle எதிர்பார்ப்பில்லாமல் காண்போருக்கு செம ஜாலி ரைடுதான். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கலாம்.

It


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *