சீன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல்
Scene Movie Advance Booking: சீன் திரைப்படம் வருகிற 6-ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
சீன்
சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் சீன். ஆவேசம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதோடு ரீசண்ட் ஆக ரிலீஸ் ஆன இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. நஸ்லான் இந்த படத்தில் சீரியல் கில்லராக நடிக்க, சூர்யா அவரை பிடிக்கும் போலீஸாக வருகிறார். இவர்கள் இருவருக்குமான ஆடுபுலி ஆட்டமே இந்த சீன் என கூறப்படுகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், சீன் திரைப்படத்தின் இதுவரையிலான ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 7+ கோடி ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது.
