சிந்தாமணி போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த முத்து… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிந்தாமணி போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த முத்து… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

பரபரப்பின் உச்சமாக சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம் இப்போது உள்ளது. பைனாச்சியரை வைத்து அண்ணாமலை வீட்டிற்கு ஆட்டம் காட்டி வருகிறார் சிந்தாமணி.

மீனா பூ வியாபாரிகளை வைத்து சிந்தாமணி மீது புகார் கொடுக்க முடிவு எடுக்க அந்த கோபத்தில் பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளார். வீட்டை ஜப்தி செய்தாக பைனான்சியர் நோட்டீஸ் அனுப்ப அண்ணாமலை வீடே ஷாக் ஆனார்கள்.

இதில் இருந்து தப்பிக்க முத்து-மீனா பைனான்சியரை சந்திக்க முயற்சி செய்ய அவரோ அவர்களை ஒரு நாள் முழுவதும் அலைய விட்டுள்ளார். பின் இந்த விஷயம் குறித்து வக்கீலிடம் கேட்டால் தற்போது கோர்ட் 10 நாள் விடுமுறை எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

சிந்தாமணி போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial May 06 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், வீட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியவில்லை, நாளை வீட்டை ஜப்தி செய்ய வந்துவிடுவார்கள் என முத்து கூற அண்ணாமலை உடைந்து போய்விடுகிறார்.

பின் முத்து நாம் இங்கே இருக்க வேண்டாம், வீட்டிற்கு சீல் வைப்பதை எல்லாம் நீங்கள் பார்த்தால் மனம் உடைந்துவிடுவீர்கள் என முத்து கூற அண்ணாமலை எங்கே செல்வது என்கிறார்.

சிந்தாமணி போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial May 06 Episode

மீனா வீட்டிற்கு போகலாம் என முத்து கூற விஜயா என் குருவி கூடு போல உள்ள அந்த வீட்டிற்கு நான் வர மாட்டேன். உன் வீட்டில் வந்து தங்கும் அளவிற்கு நான் இறங்கவில்லை, என் தகுதிக்கு அது சரிவராது என கூறுகிறார்.

கடைசியில் அண்ணாமலை, முத்து, மீனா, 3 பேரும் மீனா அம்மா வீட்டிற்கும், ரவி-ஸ்ருதி, விஜயா 3 பேரும் ஸ்ருதி அம்மா வீட்டிற்கு செல்கிறார்கள். மனோஜை அவரது ஷோரூமில் தங்க சொல்கிறார்கள்.

சிந்தாமணி போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial May 06 Episode

நாளைய எபிசோட் புரொமோவில், சிந்தாமணி அண்ணாமலை வீட்டிற்கு வர வீடு பூட்டி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். அவர்களை வெளியே அனுப்பி முத்து-மீனா அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்பலாம் என்று பார்த்தால் அது நடக்காமல் போனதே என கோபப்படுகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *