Cocktail 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Cocktail 2
இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Cocktail 2. இப்படத்தில் ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா, க்ரீத்தி சனோன் என மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ரொமான்டிக் காமெடி டிராமாவாக உருவான இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை Cocktail 2 சந்தித்துள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூலும் கிடைக்கவில்லை.
வசூல் விவரம்
இந்த நிலையில், Cocktail 2 திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 114 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே ரூ. 74 கோடி வசூலித்துள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.






