அதிரடியாக கைது செய்யப்பட்ட சிந்தாமணி, பயத்தில் சத்யா ரேகா… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

அதிரடியாக கைது செய்யப்பட்ட சிந்தாமணி, பயத்தில் சத்யா ரேகா… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

தமிழகத்தில் பரபரப்பான தேர்தல் வேலைகள் நடக்கிறது, இந்த தேர்தலுக்கு முன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் சில வாரங்களுக்கு முன் பரபரப்பான பூ சங்க தேர்தல் ஒன்று நடந்தது.

மீனா-சிந்தாமணி போட்டியிட அதில் நியாயமாக போராடிய மீனா தான் ஜெயித்தார், அந்த தோல்வியை தாங்க முடியாது சிந்தாமணி அவருக்கு சைலன்டாக பிரச்சனை கொடுக்க பிளான் போடுகிறார். 

அடுத்து சத்யா-ரேகா காதலிக்கும் விஷயம் இரு வீட்டினருக்கும் தெரிய வந்துவிட்டது. ஆனால் ரேகா வீட்டில் இந்த விஷயம் தெரிந்தும் தனது மகளை முதலில் வெளியே அனுப்பி பிரச்சனை செய்யலாம் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட சிந்தாமணி, பயத்தில் சத்யா ரேகா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial April 22 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், முத்துவை, ரேகா-சத்யா சந்திக்கிறார்கள். சத்யா வீட்டில் அம்மா இந்த காதல் வேண்டாம், வேலைக்கே போன வேண்டாம் என்கிறார்கள்.

சீதா, அம்மா, அக்கா எல்லோருமே எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயப்படுகிறார்கள் என்கிறார். இதைகேட்டதும் முத்து நீங்கள் இருவரும் தைரியமாக உங்கள் காதலில் உறுதியாக உள்ளீர்களா என கேட்க இருவரும் ஆமாம் என்கின்றனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட சிந்தாமணி, பயத்தில் சத்யா ரேகா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial April 22 Episode

இதற்கு இடையில் ரேகா தன்னை ஹைதராபாத் அனுப்புகிறார்கள் என கூற போய்ட்டு வா அதற்குள் நான் வீட்டில் இருக்கும் அனைவருடனும் பேசுகிறேன் என்கிறார். அப்போது முத்து கண்ணில் மீனாவை கத்தியால் குத்தியவர் தென்பட அவரை துரத்தி பிடித்த அடித்து உண்மையை வரவைக்கிறார். அவர் சிந்தாமணி கூறி தான் இந்த விஷயத்தை செய்தேன் என்கிறார்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட சிந்தாமணி, பயத்தில் சத்யா ரேகா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial April 22 Episode

அந்த நபரை போலீஸில் முத்து ஒப்படைக்க அவர்கள் சிந்தாமணி கைது செய்ய அவரது வீட்டிற்கு வருகிறார்கள். சிந்தாமணி யாராவது எதையாவது சொன்னால் நம்பிவிடுவீர்களா என திமிராக பேச, எதை வேண்டுமானாலும் கூறுங்கள் முதலில் ஸ்டேஷன் வாருங்கள் என்கிறார்.

பின் போலீசாரால் சிந்தாமணி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *