சூர்யாவின் கருப்பு படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?… ஆர்யா பேட்டி

சூர்யாவின் கருப்பு படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?… ஆர்யா பேட்டி


கருப்பு படம்

நடிகர் ஆர்யா, தமிழ் சினிமாவில் முக்கியமாக கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவர்.

அவரது திரைப்பட தேர்வுகள் எல்லாமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும். கடைசியாக ஆர்யா நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் என்ற படம் வெளியானது. அடுத்து ஜுன் 25ம் தேதி ஆர்யா நடித்துள்ள அனந்தன் காடு என்ற படம் வெளியாகிறது, இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தை தாண்டி தமிழிலும் இப்படம் வெளியாகிறது.

சூர்யாவின் கருப்பு படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?... ஆர்யா பேட்டி | Arya About Suriya Karuppu Movie Deleted Scene

ஆர்யா

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யாவிடம் ஒரு ஹிட் படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான சூர்யாவின் கருப்பு படத்தில் நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார், ஆனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நடிகர் ஆர்யாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

சூர்யாவின் கருப்பு படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?... ஆர்யா பேட்டி | Arya About Suriya Karuppu Movie Deleted Scene

அதற்கு அவர், கருப்பு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி என்னிடம் கேட்டார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எப்படிபட்ட கதாபாத்திரம் என கேட்காமல் தான் நடித்தேன், பின் எடிட்டிங்கில் நீக்கப்பட்டு விட்டதாக என்னிடம் அவர் தெரிவித்தார். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *