தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

Sardar 2 movie final collection in Tamil Nadu: கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் இறுதியாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



சர்தார் 2


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது.

தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie Tamilnadu Final Collection



இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie Tamilnadu Final Collection



ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அதனை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்து படுதோல்வியடைந்துள்ளது.


தமிழ்நாடு இறுதி வசூல்



இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் இறுதியாக செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் இறுதியாக ரூ. 11 கோடி வசூல் செய்துள்ளது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக வசூல் செய்த ஹை பட்ஜெட் திரைப்படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie Tamilnadu Final Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *