Mortal Kombat II : திரை விமர்சனம்

Mortal Kombat II : திரை விமர்சனம்


Mortal Kombat II 

ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Mortal Kombat II திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

Mortal Kombat II : திரை விமர்சனம் | Mortal Kombat 2 Movie Review



கதைக்களம்



எடினியா என்ற இராஜ்ஜியத்தை ஆண்டு வரும் ஜெர்ரோட், திரிசங்கு லோகத்தை ஆளும் ஷவ்கான் Mortal Kombat போட்டியில் வீழ்த்தி கொன்றுவிடுகிறார்.

பின்னர் ஜெர்ரோட்டின் மனைவி சிண்டெலை தனது துணைவியாகவும், அவரது மகள் கிட்டானாவை தனது மகளாகவும் ஆக்கிக்கொள்கிறார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் Mortal Kombat போட்டி வர உள்ளது. அதில் போட்டியிட பூலோகம் தரப்பில் ஒருவர் வேண்டும் என்பதால், லார்ட் ரைடன் மற்றும் அவரது குழு ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக இருந்த ஜானி கேஜை அழைத்து வருகின்றனர்.

Mortal Kombat II : திரை விமர்சனம் | Mortal Kombat 2 Movie Review


அவரோ நான் வெறும் நடிகர் மட்டுமே என்னால் இந்தப் போட்டியில் சண்டையிட முடியாது என்கிறார். ஆனாலும் அவர் சண்டையில் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.


மறுபுறம் தனது அப்பாவைக் கொன்று இராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய ஷாவ்கானை பழிவாங்க கிட்டானா இரகசியமாக சில வேலைகளை செய்கிறார்.

கிட்டானாவின் எண்ணம் ஈடேறியதா? ஜானி கேஜ் எப்படி சண்டையிட்டு பூலோகத்தை காப்பற்றினார் என்பதே மீதிக்கதை.


படம் பற்றிய அலசல்


பிரபலமான Mortal Kombat வீடியோ கேமை வைத்து 1995யில் அதே பெயரில் படமாக வெளியானது.

அதன் பின்னர் 2021யில் மீண்டும் Mortal Kombat படத்தை சைமன் மெக்குய்யோட் இயக்கியிருந்தார்.

அதே இயக்குநர்தான் தற்போது இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

கதையை விட ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் ஹீரோ கார்ல் அர்பன் சண்டைக்காட்சிகளில் மிரட்டனாலும், அவரை விட பிற கதாபாத்திரங்களே படத்தில் ஸ்கோர் செய்கின்றனர்.

Mortal Kombat II : திரை விமர்சனம் | Mortal Kombat 2 Movie Review


குறிப்பாக ஜெஸ்ஸிகா, அடேலின் ஆகிய ஹீரோயின்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திரைக்கதையைப் பொறுத்தவரை சில இடங்களில் கதையைவிட்டு விலகி சென்று, பின் மீண்டும் கதைக்குள் கொண்டுவருகிறார் இயக்குநர்.

இதெல்லாம் இருந்தாலும் படம் எங்குமே சலிப்புத்தட்டாமல் பரபரவென செல்கிறது. தமிழ் டப்பிங்கில் பழைய நாஸ்டாலஜிங் மொமெண்டை வசனங்களில் கொண்டு வந்திருக்கிறார்கள்.


காமெடியும், ஆக்ஷனும் கலந்து பக்காவான கமர்ஷியல் படமாக நிற்கிறது இந்த Mortal Kombat. ஆனால் மிக அதீத இரத்தக்களரியான காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்கக்கூடிய படம் இது அல்ல.


க்ளாப்ஸ்



சண்டைக்காட்சிகள்

காமெடி

பரபர திரைக்கதை



பல்ப்ஸ்



கதையைவிட்டு விலகும் ஓரிரு காட்சிகள்

ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாதது



மொத்தத்தில் இந்த Mortal Kombat பக்காவான ஆக்ஷ்ன் படமாக மகிழ்விக்கிறது. சண்டைப்பட விரும்பிகள் கண்டிப்பாக திரையரங்கில் கொண்டாடலாம்.


ரேட்டிங்: 3/5  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *