ராணாவின் அடுத்த கிரிமினல் பிளான், ஜனனிக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் நாளுக்கு நாள் புலம்பு ஆரம்பித்துவிட்டார்கள்.
முதல் பாகத்தில் ஆணாதிக்கம் கொண்ட குணசேகரனை எதிர்த்து அவரது வீட்டுப் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கிய கதைக்களம் என கூறப்பட்டது.
ஆனால் இரண்டாம் பாகம் எதை நோக்கி கதை செல்கிறது என்பது ஒன்றுமே புரியவில்லை. இப்போது கதையில் அக்காக்களுக்காக தனது நல்ல எதிர்காலத்தை விடுத்து அவர்களுக்காக போராடி வந்த ஜனனியை இப்போது எல்லோருமே கைவிட்டுவிட்டனர்.
ஜனனி-சக்திக்காக விசாலாட்சி மட்டுமே ஆதரவாக நின்று குரல் கொடுத்து வருகிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், மருத்துவமனை சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜனனிக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ். வீட்டிற்கு வந்த ராணா, இன்று ஜனனியை கண்டிப்பாக கைது செய்துவிடுவார்கள் என கூற கதிர் மிகவும் சந்தோஷப்படுகிறார்.
வீட்டிற்கு வந்த ஜனனியை கைது செய்ய போலீசார் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டு ஜனனி, சக்தி, விசாலாட்சி ஷாக் ஆகிறார்கள். ஜனனி கைது செய்யப்படுவாரா அல்லது வேறு ஏதாவது நடக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.






