ஜீ தமிழின் இதயம் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்… யார் தெரியுமா?

ஜீ தமிழ்
சன் மற்றும் விஜய் டிவியை தாண்டி தமிழ் சின்னத்திரையில் தரமான சீரியல்கள் ஒளிபரப்பி மக்களின் ஆதரவை பெற்றுவருவது ஜீ தமிழ் தொலைக்காட்சியும் தான்.
சீரியல்-ரியாலிட்டி ஷோ என இரண்டிலும் கலக்குகிறார்கள்.
புதிய என்ட்ரி
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் 2 சீரியல் குறித்து தான் பார்க்கப்போகிறோம். இந்த இதயம் தொடரின் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகத்தில் ஜனனி அசோக் நாயகியாக நடிக்க இரண்டாவது பாகத்தில் பல்லவி கௌடா நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகான காதல், மகளின் மீதான பெற்றோரின் பாசம், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ரிச்சட் கோஷ் மற்றும் பல்லவி கௌடா நாயகன்-நாயகியாக நடித்துவரும் இந்த தொடரில் விரைவில் ஒரு புதிய என்ட்ரி நடக்க இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சக்திவேல் தொடரில் நாயகி அண்ணனாக நடித்து வந்த மெர்வீன் இப்போது இதயம் தொடரில் ஆனந்த் என்ற கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.






