பிரபாஸ் பிரபல நடிகைக்கு அனுப்பிய கிப்ட்.. ஆச்சர்யப்பட்ட நடிகை

பாகுபலி படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் தேசிய அளவில் பிரபலமான ஹீரோ ஆகிவிட்டார். அதற்குப் பிறகு அவர் நடிக்கும் எல்லா படங்களுமே pan இந்தியா படங்களாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்றன.

இருப்பினும் பாகுபலி அளவுக்கு அவரால் மிகப் பெரிய வெற்றியை மீண்டும் கொடுக்க முடியவில்லை என ரசிகர்களே கூறி வருகின்றனர்.

நடிகர் பிரபாஸுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவருடன் பணியாற்றும் நடிகர் நடிகைகளுக்கு எப்போதும் அதிகளவு உணவு பொருட்களை அனுப்பி ஆச்சர்யப்பட வைப்பது தான் அது.

இமான்வி

தற்போது பிரபாஸ் நடித்து வரும் Fauzi படத்தில் நடிகை இமான்வி ஹீரோயினாக நடித்த வருகிறார். அவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்று நடிகை இமான்வியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு நடிகர் பிரபாஸ் ஏராளமான உணவை அனுப்பி வைத்திருக்கிறார். அதை புகைப்படம் எடுத்து நடிகை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

‘இதயமும் வயிறும் நிரம்பி விட்டது’ என அவர் பிரபாஸுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
 

GalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *