முன்னணி இயக்குனருடன் சூரி கூட்டணி! பூஜையில் சிவகார்த்திகேயன்
நடிகர் சூரி காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருவது அவரது ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.
சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான மண்டாடி படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.
அடுத்த படம்
இந்நிலையில் தற்போது இன்று நேற்று நாளை பட புகழ் இயக்குனர் ரவிக்குமார் உடன் சூரி தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு படத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ
