முத்துவின் அன்பிற்கு விலை பேசிய சத்யா..


Meena slap her brother Sathya in Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரம் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், முத்து குடும்பத்திற்காக செய்ததை காசை வைத்து விலை பேசிய சத்யாவை மீனா அடிக்க அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.


சிறகடிக்க ஆசை


விஜய் தொலைக்காட்சியில் டாப் 3 சீரியல்களில் ஒன்றாக வலம் வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் தற்போதைய கதைக்களத்தில் கர்ப்பமாக இருக்கும் ரோகிணி நீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் மனோஜ் வீட்டிற்கு வந்துவிட்டார்.

Siragadikka Aasai: முத்துவின் அன்பிற்கு விலை பேசிய சத்யா.. கன்னத்தில் பளார்-னு அரை விட்ட மீனா.. | Meena Slap Her Brother Sathya In Siragadikka Aasai

இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, தனது மாமியாரின் டார்ச்சரை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க விஜயா திட்டமிட்டார். ஆனால், இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரியவர, விஜயா திட்டி தீர்த்தார். இனி இப்படியொரு விஷயத்தை யோசிக்கவே கூடாது என கடும் கோபத்துடன் பேசினார்.


சத்யா


சத்யா தற்போது ரேகாவிற்கு குடும்பத்துடன் இணக்கமாகிவிட்டதால், அவருடைய நடவடிக்கையும் மாறிவிட்டது. அவர்களுடைய திருமண வரவேற்பு விழாவில் முத்துவிற்கும் சத்யாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மேலும், சத்யாவின் வாழ்க்கையில் இனி நீங்கள் தலையிடாதீர்கள் என முத்துவிடம் ரேகா கூறினார். இப்படி பல விஷயங்கள் நடந்தன.

Siragadikka Aasai: முத்துவின் அன்பிற்கு விலை பேசிய சத்யா.. கன்னத்தில் பளார்-னு அரை விட்ட மீனா.. | Meena Slap Her Brother Sathya In Siragadikka Aasai


ப்ரோமோ



இந்த நிலையில், தனது மனைவி குடும்பத்திற்காக பல விஷயங்களை முத்து செய்துள்ளார். அதற்காக ரூ. 5 லட்சம் வைத்துக்கொள்ளுங்கள் என சத்யா கூறுகிறார். இதை கேட்டவுடன் கடும் கோபத்திற்கு ஆளாகும் மீனா, தம்பி என்று கூட பார்க்காமல், பளார் என அரைக்கிறார். ‘அவர் இத்தனை வருடங்கள் குடும்பத்திற்காக செய்ததை மறந்துவிட்டு, அவருடைய பாசத்தை விலை பேசுறியா?’ என கேட்கிறார்.

Siragadikka Aasai: முத்துவின் அன்பிற்கு விலை பேசிய சத்யா.. கன்னத்தில் பளார்-னு அரை விட்ட மீனா.. | Meena Slap Her Brother Sathya In Siragadikka Aasai

இதற்கிடையில், மீனாவின் அம்மா, சத்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டான் என கேட்க, மீனா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *