6 நாட்களில் ஓம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்


O.M: Operation Mole 6 days box office: தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஓம் திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


ஓம்



2026-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் கர. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. சரி, கர படம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, ஓம் கண்டிப்பாக கைகொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Box Office: 6 நாட்களில் ஓம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole 6 Days Box Office

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியான ஓம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் 3 நாட்களுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்து வருகிறது.



6 நாட்கள் வசூல் விவரம்



முதல் நாளிலிருந்து ஓம் திரைப்படம் செய்து வரும் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 6 நாட்களை கடந்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் ஓம் திரைப்படம் ரூ. 109 கோடி வசூல் செய்துள்ளது.

Box Office: 6 நாட்களில் ஓம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole 6 Days Box Office

பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இவை நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு எடுக்கப்பட்ட விவரங்களே என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *