நடிகர் கார்த்தியின் 49-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கார்த்தி
இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி.
முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கொடுத்த இவர், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன், சிறுத்தை, கைதி, கொம்பன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக சர்தார் 2, மார்ஷல் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.
பிறந்தநாள்
இன்று நடிகர் கார்த்தியின் 49-வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் கார்த்திக்கு தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 – 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 20 – 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் கார்த்தி வருமானம் ஈட்டி வருகிறார்.
பொறுப்பு துறப்பு: நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.






