தர்ஷினி விஷயத்தில் கரிகாலன் சொன்ன விஷயம், ஷாக்கான குடும்பம்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்களில் மிகவும் பரபரப்பான கதைக்களம் செல்கிறது.
இந்த கதைகளில் எப்போது பரபரப்பு குறையும் என்றே தெரியவில்லை. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பல வருடங்களுக்காக குடும்பத்தினருக்கு அநியாயம் செய்துள்ளார், அவருக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என்பதே தெரியவில்லை.
புரொமோ
தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், குணசேகரன் வழக்கில் முக்கிய சாட்டியாக இருந்து ஈஸ்வரி இப்போது அப்படியே ஜனனிக்கு எதிராக உள்ளார்.
ஜனனி வழக்கில் ஜெயிக்க அடுத்த ஆதாரமாக இப்போது தர்ஷினியை நம்புகிறார், அவரும் கண்டிப்பாக நான் சாட்டி கூறுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஆனால் வீட்டில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை, இதனால் தர்ஷினி நான் வெளியே செல்கிறேன் என ஜனனி வீட்டிற்கு வர கிளம்புகிறார், ஆனால் இடையில் யாரோ கடத்திவிடுகின்றனர்.
வீட்டில் தர்ஷினி எங்கே சென்றார் என எல்லோரும் பயப்பட கரிகாலன், தர்ஷினி ஜனனி வீட்டிற்கு தான் கிளம்பியுள்ளார் என்கிறார், அதைக்கேட்டதும் குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள்.






