படு மோசமாக பேசிய விஜயா, அதை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத முத்து… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
மீனாவை குழந்தைகள் பிறக்கும் மருத்துவமனையில் விஜயா பார்த்ததால் வீட்டிற்கு வந்து பெரிய பிரச்சனை செய்துவிட்டார்.
மீனா கர்ப்பமாக இருப்பாளோ என்று சந்தேகமாக உள்ளது, இவர்கள் மறைக்கிறார்களோ என எனக்கு தோன்றுகிறது. அப்படி ஒன்றும் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கூற ரவி என்ன இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என்கிறார்.
விஜயா உடனே ஆமாம், மனோஜிற்கு பிறக்கும் குழந்தை தான் முதல் வாரிசாக இருக்க வேண்டும் என்கிறார். அதற்கு ஸ்ருதி கேள்வி கேட்க, உனக்கு முதலில் குழந்தை பிறந்தால் கூட ஒப்புக்கொள்வேன், ஆனால் ஒரு பூக்காரிக்கு பிறக்கும் குழந்தை இந்த வீட்டின் முதல் வாரிசாக இருக்க கூடாது என்கிறார்.
அவர் பேசியதை கேட்டு அண்ணாமலை, நானும் ஒரு சாதாரண என்ஜின் டிரைவர் என்னுடன் குடும்பம் நடத்தி எப்படி 3 பிள்ளை பெற்றாய். மகன்களிடம் பாரபட்சம் பார்க்காதே என்றால் அதையே செய்கிறாய் என கோபப்படுகிறார்.
அம்மா ரொம்ப ஓவரா போறாங்க, மீனாவிற்கு உடம்பு முடியவில்லை என மருத்துவமனை சென்று வருகிறேன். இன்னும் குழந்தையே பிறக்கவில்லை, அதற்குள் பாரபட்சம் என கண்ணீர்விட்டு அழுகிறார்.
அடுத்து மனோஜ், கனகா அம்மாவிடம் எப்படியோ பேசி முதலில் பணத்தை பெற்றுக்கொள்கிறார். அந்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து விஜயாவிடம் கொடுக்க எல்லோரும் எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்புகிறார்கள்.
கடைசி வரை மனோஜ் உண்மையை கூறவில்லை.






