மயில் பிரச்சனைக்கு இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்.. யார் பாருங்க

மயில் பிரச்சனைக்கு இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்.. யார் பாருங்க

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் எல்லாம் அழகே அழகு தொடருடன் மகா சங்கமம் நடந்து வந்தது. அப்போது கதிர், முத்துவேலை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பிரச்சனை வெடித்தது.

ஆனால் பெரிய அளவில் பிரச்சனை ஆகாமல் அப்படியே சுமூகமாகவே முடிந்தது.

மயில் பிரச்சனைக்கு இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்.. யார் பாருங்க | Pandian Stores 2 Serial Actor New Entry

இந்த வார பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடின் புரொமோவில், கோமதி மயில் வீட்டிற்கு சென்று பணம் கொடுக்க அந்த பணத்தை மீண்டும் கோமதியிடமே மயில் கொடுத்துவிட்டு செல்கிறார்.

என் குழந்தைக்கு தான் அந்த பணம் கொடுத்தோம் என கூற அதுதான் உங்கள் குழந்தையே இல்லையே என மயில் கூறுகிறார்.

மயில் பிரச்சனைக்கு இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்.. யார் பாருங்க | Pandian Stores 2 Serial Actor New Entry

நியூ என்ட்ரி

இன்றைய எபிசோடில், பாண்டியன் சரவணனிடம் மயிலை சந்தித்து பணம் கொடுக்க கூறுகிறார். ஆனால் அவரோ நான் ஏன் கொடுக்க வேண்டும், என்னால் அந்த குடும்பத்தை பார்க்க முடியாது என கூறி விடுகிறார்.

அந்த நேரத்தில் தனம் சீரியல் புகழ் நடிகரின் நியூ என்ட்ரி வருகிறது. என் பெயர் கார்த்திகேயன், நான் நாச்சியார்புரத்தில் இருந்து வருகிறேன், Organic Farming செய்கிறேன் என கூறுகிறார். நான் தோட்டத்தில் காய்கறி, பழங்களை வைக்கிறேன், விளைச்சல் இப்போது அதிகமாக உள்ளது.

எனது காய்கறிகளை உங்களது கடையில் வைத்த விற்று தர முடியுமா என கேட்க தான் வந்தேன் என்கிறார். ஆனால் பாண்டியன் இங்கு காய்கறி வியாபாரம் செய்ய முடியாது என கூற அவர் கிளம்பிவிடுகிறார்.

கார்த்திகேயனுக்கும் அரசிக்கும் விபத்து ஏற்படும் சம்பவத்தோடு என்ட்ரி வருகிறது, அதைப்பார்க்கும் போது அரசிக்கு ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *