நடிகர் டைகர் ஷராஃப் மீது துப்பாக்கிசூடு! அதிர்ச்சியில் சினிமா துறை
ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவர் டைகர் ஷராஃப். அவர் அதிகம் ரிஸ்க் எடுத்து நடிக்கும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இன்று, ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையில் நடிகர் டைகர் ஷராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர்.
இது ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிஷ்டவசமாக டைகர் ஷராஃப் துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பி இருக்கிறார். ஆனால் அவரது உடன் இருந்த இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
துப்பாக்கி சூடு நடத்தியது யார் என தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
