அஜித் படம் ட்ராப்.. ‘நீ ஒரு மொக்க பீஸ்’னு சொன்னாங்க: உருக்கமாக பேசிய விக்னேஷ் சிவன்

அஜித் படம் ட்ராப்.. ‘நீ ஒரு மொக்க பீஸ்’னு சொன்னாங்க: உருக்கமாக பேசிய விக்னேஷ் சிவன்


விக்னேஷ் சிவன் இயக்கிய LIK படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் மேடையில் பேசிய விக்னேஷ் சிவன் தான் அஜித்தை வைத்து இயக்க இருந்த படம் ட்ராப் ஆனது பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.

தாலி கட்டும் முன் பெண்..

நான் ஒரு மிகப்பெரிய படம் எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் கல்யாண மண்டபத்தில் தாலி காட்டும் முன் பெண் எழுந்து போய்விட்டால், அந்த பெண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆவது கஷ்டமோ, அந்தமாதிரி ஒரு படம் நிற்கும்போது, அதில் இருந்து takeoff ஆகி இன்னொருவரை நம்ப வைப்பது ரொம்ப கஷ்டம்.

அஜித் படம் ட்ராப்..

சின்னதா பண்ணுங்க, ஈஸியா பண்ணுங்க என எல்லோரும் சொன்னது என் காதில் கேட்டது. அவர்கள் மறைமுகமாக சொல்வது என்னவென்றால்.. ‘நீ ஒரு மொக்க பீஸ்’ என்பது போல பார்க்கிறார்கள் என தெரிந்தது. அதை முதல் முறை அனுபவித்ததால் பரவாயில்லை, பல முறை நடந்திருக்கிறது. ஒரே இரவில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.

இவ்வாறு விக்னேஷ் சிவன் உருக்கமாக பேசி இருக்கிறார்.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *