தமிழ்நாட்டில் 5 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்


Jailer 2 Tamilnadu Collection: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


ஜெயிலர் 2


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்தால் பிளாக்பஸ்டர்தான் என்பது போல் ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2-வும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 5 Days Collection

உலகளவில் இதுவரை இப்படம் 5 நாட்களில் ரூ. 475 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படத்தின் இறுதி வசூல் ரூ. 800 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 5 Days Collection

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ரூ. 1000 கோடி வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நான்கு வாரத்தில் ஓடிடி ரிலீஸ், வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜெயிலர் 2 வெளியாகாதது போன்ற காரணங்களால் ரூ. 1000 கோடி என்பது சற்று கடினம் என்கின்றனர்.



தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்



ரூ. 1000 கோடி வசூல் என்பது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 5 Days Collection


அந்த வகையில், 5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *