ஜெயிலர் 2 அலையில் சிக்கி தவிக்கும் ரணபாலி.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்


Ranabaali Box Office: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ரணபாலி திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

ரணபாலி

டாக்சி வாலா, ஷியாம் சிங்க ராய் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் ராகுல் சங்கரித்யன். இவர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணத்திற்கு பின் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ரணபாலி.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் வோஸ்லூ வில்லனாக நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் வெளியான மம்மி, மம்மி ரிட்டர்ன்ஸ், பிளட் டைமண்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி, எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், ஜெயிலர் 2 வெளியான அடுத்த நாளே இப்படம் வெளியானதும் இப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ்

ஜெயிலர் 2 அலையில் சிக்கி தவிக்கும் ரணபாலி திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இப்படம் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *