ரணபாலி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Ranabaali 4 days box office: ரணபாலி திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரணபாலி
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், சமீபத்தில் வெளிவந்த ரணபாலி திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கரித்யன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
வசூல்
இந்த நிலையில், ரணபாலி திரைப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பார்ப்போம்.
