அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. எந்த படம் தெரியுமா?

விஜய் – அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய் – அஜித். இவர்கள் இருவரும் தங்களுடைய ஆரம்பகால கட்டத்தில் ராஜாவின் பார்வையிலே என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதன்பின் இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்திலும் இணைந்து நடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம்தான்.
இந்த நிலையில், அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம் ஒன்றில் விஜய் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். அது வேறு எந்த திரைப்படமும் இல்லை மங்காத்தா தான். ஆம், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றிபெற்ற மங்காத்தா திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் விரும்பியுள்ளார்.
மங்காத்தா
இதை பற்றி பேட்டி ஒன்றில் இயக்குநர் வெங்கட் பிரபு வெளிப்படையாக கூறியுள்ளார். மங்காத்தா திரைப்படம் வெளியான பிறகு, விஜய் வெங்கட் பிரபுவை நேரடியாக தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
அப்போது, “அந்த படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் என்னை அழைத்திருந்தால், நான் கண்டிப்பாக நடித்திருப்பேன்; அது இன்னும் பெரிய அளவில் இருந்திருக்கும் என வெங்கட் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். மேலும், “நீங்கள் முன்பே கூறியிருந்தால் நான் முயற்சி செய்திருப்பேன்” என்றும் விஜய் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.






