அஜித்தின் டாக்குமெண்ட்ரி கிளாடியேட்டர் ரிலிஸ் தேதி இதுவா..


 கிளாடியேட்டர்

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்திற்கு பூஜை போட்டதோடு சரி, அதை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்ஸும் அந்த படத்தை பற்றி இல்லை.

அதே நேரத்தில் அஜித் தனது கார் ரேஸ் வைத்து ஒரு டாக்குமெண்ட்ரி ஒன்றை இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாரித்தார்.

அதில் தமிழ் சினிமாவின் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு பேசுவது போல் அந்த டாக்குமெண்ட்ரி இருக்குமாம், அதோடு இவை அனைத்திற்கும் உச்சமாக முதல்வர் விஜய்யும் அதில் தோன்றுவது போல் சில காட்சிகள் இடம்பெறும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த கிளாடியேட்டர் டாக்குமெண்ட்ரி நவம்பர் 19-ம் தேதி திரைக்கு கொண்டு வர தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது, இது நடந்தால் விஜய்-அஜித் இருவரையும் ஒன்றாக ரசிகர்கள் பார்த்து கொண்டாடலாம் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *