Unmadham (மலையாளம்): திரை விமர்சனம்

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம்


குஞ்சாகோ போபன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள உன்மாதம் மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம் | Unmadham Movie Review

கதைக்களம்



பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் ஷெல்லி (குஞ்சாகோ போபன்) சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக வேண்டுமென முயற்சி வருகிறார்.



அதற்காக அவர் கொண்டு செல்லும் கதைகள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன. சினிமாவில் வெற்றி பெற வேண்டுமென ஷெல்லி முயற்சிப்பது ஸ்டேஷனில் கேலியாக பார்க்கப்படுகிறது.

மேலும், அவரது மனைவி அவர் மேல் கோபமாக இருக்க காரணமாகவும் உள்ளது.

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம் | Unmadham Movie Review

என்றாலும் தனது முயற்சியில் ஷெல்லி நீடிக்க, ஒரு எதிர்பாராத நிகழ்வினால் அவர் கொங்காடு ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் ஆகிறார்.

அங்கு சென்ற முதல் நாளே சபிக்கப்பட்டதாக கூறப்படும் 174 கேஸ் ஃபைல் ஒன்றை தெரியாமல் எடுத்துவிடுகிறார் ஷெல்லி.


அதனைப் பார்த்த ரைட்டர் பதறிப்போய் அவரிடம் 174 கேஸ் ஃபைலை தொட்டாலே சீருடையில் இரத்தக்கறை படிந்துவிடும், உயிரை பலி வாங்கும் அல்லது ஆபிசர் யாருக்காவது சஸ்பெண்ட் கிடைக்கும் என எச்சரிக்கிறார்.

அப்போதுதான் ஷெல்லிக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது.

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம் | Unmadham Movie Review

174 கேஸ் ஃபைலை வைத்து ஒரு திரைக்கதையை எழுதும் முயற்சியில் இறங்குகிறார். அதன் பின்னர் அந்த ஃபைல் மூலம் ஷெல்லியின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது, ஃபைல்லில் உள்ள கேஸின் மர்மம் என்ன என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்



தமிழில் வெளியான ராட்சசன் பட பாணியில் ஆரம்பிக்கும் கதை, மர்மமான கேஸ் ஃபைலின் அறிமுகத்திற்கு பின் வேறு தளத்தில் செல்கிறது.


ஹீரோவுக்கு இருக்கும் மனப்பிரச்சனை; அதனை சமாளிக்கும் வேளையில் அவரே தேடிப்போய் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வது என அடுத்தடுத்த காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார் இயக்குநர்.

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம் | Unmadham Movie Review

சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர் என இரண்டும் கலந்து செல்லும் திரைக்கதை பார்வையாளர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

என்றாலும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும்போது அட என்று கூற வைக்கிறார் இயக்குநர்.

கிளைமேக்ஸ் கண்டிப்பாக செம ட்விஸ்ட்.

நடிகர்களைப் பொறுத்தவரை குஞ்சாகோ போபன் தனியாளாக முழு படத்தையும் தனது தோள்களில் தங்கியுள்ளார் என்றே கூறலாம்.

படம் முழுக்க நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம் | Unmadham Movie Review

சண்டைக்காட்சி ஒன்றில் தனக்கான மாஸையும் மிரட்டலாக காட்டியிருக்கிறார்.

அவரைத் தவிர வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் பெரிதளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை. லிஜோமோல் ஜோஸை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.


முஜீப் மஜீத்தின் படத்திற்கு மிகப்பெரிய பலம்; தேவையான இடங்களில் சைலண்டாக விட்டும், பிற இடங்களில் பயமுறுத்தும் பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.

அர்ஜுன் சேதுவின் ஒளிப்பதிவு சிறப்பு. படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இயக்குநர் கிரண் தாஸ் முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.  

க்ளாப்ஸ்



குஞ்சாகோ போபன்.. குஞ்சாகோ போபன்.. குஞ்சாகோ போபன்



திரைக்கதை



கிளைமேக்ஸ்



பின்னணி இசை



பல்ப்ஸ்



முதல் பாதியில் கதை தொடங்க நேரமெடுப்பது




மொத்தத்தில் இந்த உன்மாதம் வித்தியாசமான திரைக்கதையில் கிரைம் திரில்லர் எதிர்பார்ப்பவர்களுக்கு செம ட்ரீட். 

Unmadham (மலையாளம்): திரை விமர்சனம் | Unmadham Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *