நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்

Sivaji Ganesan daughter Shanthi passed away: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று காலை காலமானார்.

சிவாஜி கணேசன்

திரையுலகில் நடிப்பிற்கு இலக்கணமாக இருப்பவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு என்ற சொல்லுக்கு மறுபெயர் சிவாஜி கணேசன் என்றுதான் தமிழ் சினிமாவில் அவரை அடையாளப்படுத்துவார்கள்.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

மூத்த மகள் சாந்தி

சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம் குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். தனது மூத்த மகள் சாந்தியின் பெயரில் சென்னை அண்ணாசாலையில் ஒரு திரையரங்கை கட்டினார் சிவாஜி.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

மேலும், சிவாஜி நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதக்கம் திரைப்படத்தை சாந்தி தயாரித்துள்ளார். சாந்தியின் கணவர் நாராயணசாமி; இவர்களுக்கு சத்யலட்சுமி என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

மரணம்

இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார் | Sivaji Ganesan Elder Daughter Shanthi Passed Away

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *