8 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி கொடுக்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்… எப்போது, எந்த டிவி, முழு விவரம்
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களில் நடித்த ஹிட் படங்களில் ஒன்று தான் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. வருகிற அக்டோபர் 15ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன் டிரைலரும் வெளியானது.
இதில் ரஜினியுடன், ஜாக்கி ஷெராப், மிதுன் சக்கரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன்,மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்ஜே.சூர்யா , யோகி பாபு , வித்யா பாலன் , மிர்னா, பூர்ணா, நோரா பதேகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றனர்.
பேட்டி
ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ள நிலையில் இப்போது சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படம் ரிலீஸ் 4 நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரத்யேக தொலைக்காட்சி நேர்காணல் வரும் அக்டோபர் 11ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த 2018ம் ஆண்டு 2.0 படத்திற்காக பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
