மாட்டிக்கொண்ட திருடன்.. முத்துவை கட்டிப்பிடித்து அழுத மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

Siragadikka aasai upcoming episodes serial promo: சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கடை யாரால் சூறையாடப்பட்டது என்பதை முத்து கண்டறிந்துவிட, அதன்பின் மனோஜ் தனது முத்துவை கட்டிப்பிடித்து கண்கலங்குகிறார். இதுகுறித்து தற்போது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.


சிறகடிக்க ஆசை சீரியல்


சின்னத்திரையில் அனைவரின் மனதையும் கவர்ந்த சீரியலாக சிறகடிக்க ஆசை உள்ளது. இந்த சீரியலில் தற்போது மனோஜ் கடையை முழுவதுமாக யார் திருடியது என்பது தெரியாமல் அனைவரும் உள்ளனர். அதுபோக கடையில் இருந்து கோடிக்கணக்கான பணமும் திருடப்போய் உள்ளது.

மாட்டிக்கொண்ட திருடன்.. முத்துவை கட்டிப்பிடித்து அழுத மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் | Siragadikka Aasai Upcoming Episodes Promo


புரோமோ வீடியோ



இந்த நிலையில், அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், மீனா தனக்கு தெரிந்தவரின் வீட்டிற்கு செல்ல, அங்கு புதிய AC இருப்பதை பார்த்து விசாரிக்கிறார். குறைந்த விலையில் இடஙக AC, அதுமட்டுமின்றி வீட்டு பொருட்கள் எல்லாம் விற்பனை செய்கிறார்கள் என அவர் கூற, இதை முத்துவிடம் தெரிவிக்கிறார்.

மாட்டிக்கொண்ட திருடன்.. முத்துவை கட்டிப்பிடித்து அழுத மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் | Siragadikka Aasai Upcoming Episodes Promo

உடனே முத்து யார் இதை செய்து வருகிறார்கள் என கண்டுபிடித்து, அவர்கள் வீட்டிற்கு செல்ல, அங்கு மனோஜ் கடையில் இருந்து திருடப்பட்ட அனைத்து பொருட்களும் உள்ளன. திருடப்பட்ட பொருட்கள் முத்துவால் தனக்கு கிடைத்துவிட்டது என தெரிந்து, உடனே அவரை கட்டிப்பிடித்து கண்கலங்குகிறார் மனோஜ்.



இதோ புரோமோ வீடியோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *