பாக்ஸ் ஆபிஸ்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆகாயத்தில் ஒரு தாரகை வசூல்
AOT Movie Box office: துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 20-ஆம் தேதி வெளியான ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஆகாயத்தில் ஒரு தாரகை
துல்கர் சல்மான், சாத்விகா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஆகாயத்தில் ஒரு தாரகை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அதோடு முதல் நாள் வசூல் இப்படத்திற்கு மிகவும் குறைவு, இதனால் படக்குழு கொஞ்சம் அச்சத்தில் இருக்க, அடுத்த நாளே படத்தின் பாசிட்டிவ் விமர்சனம் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.
வசூல் விவரம்
ஆம், இப்படம் முதல் நாள் ரூ. 6 கோடி வரை வசூல் செய்ய, இரண்டாம் நாளான நேற்று அப்படியே இப்படத்தின் வசூல் இரண்டு மடங்கு ஆகியுள்ளது, தற்போது இரண்டு நாள் முடிவில் ஆகாயத்தில் ஒரு தாரகை படம் ரூ. 16+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இன்று இப்படத்தின் புக்கிங் நேற்றைவிட நன்றாக இருக்க கண்டிப்பாக இந்த 3 நாள் 27+ கோடிகள் வரை இப்படத்தின் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
