முத்துவை பற்றிய முக்கியமான விஷயத்தை சிந்தாமணியிடம் கூறிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், அண்ணாமலையின் வீடு கையில் கிடைக்குமா இல்லையா என்ற பரபரப்புடன் தான் இந்த தொடரின் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
முத்து-மீனா வீட்டை மீட்க எங்கெங்கோ போராடி வந்தனர். பின் முத்து தனது பழைய முதலாளியை சந்தித்து பழைய கார்களை ரிப்பேர் செய்து அதை ஓடும் கண்டிஷனுக்கு கொண்டு வந்தார். அந்த கார்களை வைத்து எப்படியோ முத்த பணத்திற்கு எற்பாடு செய்தார்.
முதலில் கிடைத்த ரூ. 10 லட்சத்தை அண்ணாமலையிடம் கொடுத்து நாளை முழு பணமும் வந்துவிடும் வீட்டை மீட்டுவிடலாம் என்கிறார்.
இதனால் அண்ணாமலை-விஜயா என குடும்பமே சந்தோஷம் அடைகிறார்கள்.
எபிசோட்
இந்த பண விஷயத்தை விஜயா, மனோஜிற்கு போன் செய்து கூறுகிறார். பின் ரோஹினி மனோஜ் ஷோரூமிற்கு வருகிறார், அங்கு வந்து ஒரு நிகழ்ச்சி போகலாம், அங்கு சென்றால் நமக்கு ஒரு நல்ல எதிர்க்காலம் இருக்கிறது என்கிறார்.
ஆனால் விஜயாவிற்கு பயந்து மனோஜ் வர மறுக்கிறார், அந்த நேரத்தில் வீட்டிற்காக பணத்தை முத்து ரெடி செய்த விஷயத்தையும் கூறுகிறார். உடனே ரோஹினி சிந்தாமணியை வீட்டிற்கு அழைத்து முத்து பணத்தை ரெடி செய்த விஷயத்தை கூறுகிறார்.
அந்த வீடு அவர்கள் கைக்கு வரக்கூடாது, அப்படி நடந்தால் நான் மனோஜுடன் சேர முடியாது. வீட்டுப் பிரச்சனை முடிந்தால் மனோஜிற்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள், அப்படி நடக்கக்கூடாது.
நீங்கள் எப்படியாவது வீடு அவர்கள் கைக்கு வராதபடி செய்யுங்கள் என சிந்தாமணியிடம் ரோஹினி கூறுகிறார். அந்த விஷயத்தை ரோஹினி அம்மா கேட்டு ஷாக் ஆகிறார்.






