தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

கருப்பு
சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 312 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் ரூ. 160 கோடியை கடந்துவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே கருப்பு திரைப்படத்தை 1 கோடி மக்கள் பார்த்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் பார்த்த படமாக கருப்பு சாதனை படைத்துள்ளது.
1 கோடிக்கும் அதிகமான மக்கள்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கை மற்றும் அவை யாருடைய படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.
-
ரஜினிகாந்த் – 9 திரைப்படங்கள் -
கமல்ஹாசன் – 6 திரைப்படங்கள் -
விஜய் – 3 திரைப்படங்கள் -
அஜித் – 2 திரைப்படங்கள் -
சரத்குமார் – 1 திரைப்படம் -
சூர்யா – 1 திரைப்படம்






