ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்… என்ன தெரியுமா?

ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்… என்ன தெரியுமா?


ஜனநாயகன்

2026 ஜனவரி மாதமே ரசிகர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய படம் ஜனநாயகன். ரிலிஸிற்கு எல்லாம் தயாரான நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற தாமதமானதால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

அந்த பட வேலைகளுக்கு இடையில் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கி அதற்காக கடினமாக உழைக்க இப்போது ஆட்சியை பிடித்து சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? | New Update About Vijay Jananayagan Movie

விஜய்யை முதலமைச்சராக மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அவரது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தி சில தினங்களுக்கு முன் வந்தது, வேறென்ன ஜனநாயகன் பட ரிலீஸ் செய்தி தான்.

அப்டேட்

படம் வரும் ஜுலை 23ம் தேதி மாஸாக வெளியாக உள்ளது. இந்தியாவை தாண்டி 30 நாடுகளில் மொத்தமாக 7000 முதல் 8000 திரைகளில் படம் ரிலிஸ் ஆக இருக்கிறதாம்.

அதோடு படத்தில் நிறைய விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக அமையும் என்றும் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கூறியுள்ளார். தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால், அடியே என் பூந்தேனே என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *