பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் 10
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த 10வது சீசனில் புது புது விஷயங்களாக நடந்து வருகின்றன, சட்டப்பேரவை போல ஒரு டாஸ்க் வைக்கும் வீடே சண்டையால் வெடித்தது. அந்த டாஸ்க் முடிவடைய வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் வீட்டிற்கு வந்து அவர்கள் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பினார்கள்.
இதற்கு இடையில் வீட்டில் வைக்கப்பட்ட ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு குமரன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
எலிமினேஷன்
குமரன் பணப்பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் லட்சுமி ப்ரியா எலிமினேஷனில் இருந்து தப்பித்தார்.
மீதமுள்ள 4 பேரில் ஒரு ஜோடிக்கு ஒருவர் என ஒரு நபர் வெளியேற வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்த வார இறுதியில் மக்கள் வோட்டிங் அடிப்படையில் கம்மியாக வாக்குகளை பெற்ற சவின்யாவும், தன்யாவும் வெளியேறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இவ்வாரம் பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு சவின்யா வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.
