உலகளவில் சீன் திரைப்படம் 19 நாட்களில் செய்துள்ள வசூல்
Scene movie 19 days box office: சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவாகி வெளியான சீன் திரைப்படத்தின் 19 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சீன்
சூர்யா எப்போது கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், ரசிகர்களுக்கு படையல் விருந்தாக வந்தது கருப்பு. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற மாபெரும் சாதனையையும் இப்படம் படைத்தது. கருப்பு வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க, ஒரே ஆண்டில் இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார்.
தொடர் வெற்றியை கொண்டாடி வந்த ரசிகர்கள், சீன் திரைப்படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, தீபாவளிக்கு வெளியான சீன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. மலையாள இயக்குநரான ஜீது மாதவன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கினார். மேலும், பல ஆண்டுகளுக்கு பின் நஸ்ரியா தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சீன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 19 நாட்களில் உலகளவில் சீன் திரைப்படம் ரூ. 273 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 300 கோடியை தொட்டு சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 19 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இவை நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வசூல் விவரங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
