5 ஆண்டுகளை கடந்த மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் விவரம் இதோ

5 years of Maanaadu movie & box office collection: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து 2021-ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் இன்றுடன் 5 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த நிலையில், இப்படம் மொத்தமாக செய்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.


மாநாடு


டைம் லூப் கான்சப்ட்-ஐ மையமாக வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் மாநாடு. சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்திருந்தார்.

5 ஆண்டுகளை கடந்த மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் விவரம் இதோ | 5 Years Of Maanaadu Movie Box Office Collection

அரசியல் சதி, அதனால் மதத்திற்குள் ஏற்படும் பிளவு, இதனை தடுக்க ஹீரோவும் அவருக்கு எதிராக வில்லனும் டைம் லூப்பில் சிக்கி தவித்து, பின் அதன் மூலம் மொத்த சதியை தடுத்து நிறுத்த எடுக்கும் முயற்சி என மாநாடு திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையில் அமைந்திருக்கும்.


5 ஆண்டுகளை கடந்த மாநாடு



2021-ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில், மாநாடு திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இதில், “மாநாடு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

5 ஆண்டுகளை கடந்த மாநாடு திரைப்படம்.. மொத்த வசூல் விவரம் இதோ | 5 Years Of Maanaadu Movie Box Office Collection



மொத்த வசூல்


சிம்புவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும். இந்த நிலையில், 5 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் மாநாடு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ. 88 – 90 கோடி வரை வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *