‘கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி’.. கணவருடன் ரொமான்ஸ்.. நடிகை மைனா நந்தினி வெளியிட்ட பதிவு

‘கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி’.. கணவருடன் ரொமான்ஸ்.. நடிகை மைனா நந்தினி வெளியிட்ட பதிவு


மைனா நந்தினி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து இன்று ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி.



இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இதை தொடர்ந்து சின்னத்தம்பி, அரண்மனை கிளி என சீரியல்களில் நடித்து வந்தார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இதன்பின், அரண்மனை 3, விக்ரம், விருமன், தலைவன் தலைவி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கணவருடன் ரொமான்ஸ்


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர் மைனா நந்தினி. தனது சமீபத்திய பதிவுகளை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் இவர், தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள பதிவில், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி’ என தலைப்பிட்டுள்ளார் நடிகை மைனா நந்தினி. இதோ அந்த பதிவு:




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *