இளையராஜாவுடன் கைகோர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ்.. புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ்.
இதன்பின் கர்ணன், மாமன்னன், வாழை என தொடர்ந்து சமூக நீதி பேசும் திரைப்படங்களை எடுத்தார். கடைசியாக இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பைசன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் வாழை 2 திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.
மஞ்சணத்தி
இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி எனும் திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கப்போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த அறிவிப்பு வீடியோ:






