இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில்
சமீபத்தில் ரிலீஸ் ஆன டோரதி படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது கலாச்சார சீரழிவு, படத்தின் கிளைமாக்சில் ஆண் – ஆண் கிஸ் செய்வது அருவருப்பாக இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் “இன்னும் 10 வருடத்தில் நாங்க தான் நார்மல், உங்களை அருவருப்பா பாப்பாங்க” என ஓரின ஈர்ப்பாளர்கள் ஆதரவாக வரும் வசனமும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் பதில்
இந்நிலையில் டோரதி படத்திற்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், “சிலர் படம் பார்க்காமல் தேவை இல்லாத விவாதங்களை கிளப்பி இருக்கின்றனர்.”
“90களில் நடக்கும் கதை இது. 10 வருடங்கள் கழித்து தற்போது திருநங்கைகள் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். அதை குறிப்பிட்டு தான் அப்படி ஒரு வசனம் வைக்கப்பட்டது” என இயக்குனர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
