சார், இதுக்கு போய் நீங்க சீரியஸா.. வெங்கட் பிரபு சர்ச்சைக்கு சிவகார்த்திகேயன் பதில்
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் கூட்டணி சேர இருந்த படம் ட்ராப் ஆன நிலையில் அதற்கு பிறகு சேயோன் என்ற சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபுவை நிராகரித்ததற்காக அவரது அப்பா கங்கை அமரன் கடும் கோபமாக சிவகார்த்திகேயனை தாக்கி பேசி பேட்டி அளித்திருந்தார். அது பெரிய அளவில் வைரலானது.
அது பற்றி விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு தனது ப்ரொபஷனல் விஷயங்களை அப்பா உட்பட யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்றும், சிவகார்த்திகேயன் படம் ட்ராப் ஆக பல்வேறு காரணங்கள் இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இதுக்கு போய் நீங்க சீரியஸா..
வெங்கட் பிரபுவின் பதிவுக்கு சிவகார்த்திகேயன் தற்போது பதில் அளித்திருக்கிறார்.
“சார் நாம் ஒரே குடும்பம். இதுக்கு போய் நீங்க சீரியஸா ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுடைய அடுத்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சார் இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். நான் எப்போதும் வெங்கட் பிரபு ரசிகன் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் சார்” என சிவகார்த்திகேயன் பதில் அளித்திருக்கிறார்.
Sir, we are family. Idhuku poi neenga serious-ah reply pannitu irukeenga!
Thank you so much for your wishes, sir, and my best wishes for your next project 🤗
Sir, I’ve told you this before, and I’m saying it again – I’ll always be a VP fan. Waiting to collaborate with you… https://t.co/HGxdc876NC
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 28, 2026
