துல்கர் சல்மான் பெயரில் மோசடி செய்யும் நபர்! காட்டமாக பதிவிட்ட நடிகர்
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
துல்கர் சல்மான் தற்போது தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி X தளத்தில் மோசடி செய்யும் நபர் பற்றி காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
நம்பாதீங்க
அது என்னுடைய நிஜமான அக்கவுண்ட் என யாரும் நம்ப வேண்டாம். இது என் பெயரில் இருக்கும் கணக்கு Parody அக்கவுண்ட் என குறிப்பிட்டு இருப்பதால் மட்டுமே என்னைப் போல பல இடங்களில் கமெண்ட் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
படங்கள் பற்றி பதிவிடுவது, நடிகர்கள் பற்றி பதிவிடுவது, எனது குடும்பத்திற்கே வாழ்த்து செய்தி அனுப்புவது என இந்த நபர் செய்யும் விஷயங்கள் தேவையில்லாத குழப்பங்கள் மற்றும் எதிர்வினையை ஏற்படுத்துகிறது.
இந்த கணக்கு பற்றி நான் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் இன்னும் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.
இவ்வாறு துல்கர் பதிவிட்டுள்ளார்.
Kindly requesting everyone to stop believing @_dulQuer to be my real account. This account claims to be a “parody account” and therefore feels it’s amusing to pretend to be me and comment as me on everything. Whether it’s writing about movies or about other actors to even writing…
— Dulquer Salmaan (@dulQuer) September 27, 2026
