20 நாள் முடிவில் சூர்யாவின் சீன் தமிழகத்தில் செய்த வசூல்…
சீன் படம்
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சீன்.
ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜெயஸ்ரீ தாமோதரன் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஜீத்து மாதவன் இயக்கியுள்ளார்.
சூர்யாவுடன், நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன், சுரேஷ் மதியழகன், கஜராஜ், அனுராதா ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தவர்.
தீபாவளி ஸ்பெஷலாக கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியாகி இருந்தது.
பட கதை
சூர்யா நிறைய போலீஸ் கதைகள் நடித்தாலும் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டுள்ளது.
கதை போலவே சூர்யாவின் நடிப்பும் புதுவிதமாக இருப்பதாக நிறைய நல்ல விமர்சனங்கள் வந்தன.
ஒன் மேன் ஆர்மியாக படம் முழுக்க தாங்கி பிடித்திருக்கிறார் சூர்யா.
பாக்ஸ் ஆபிஸ்
ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் சீன் 20 நாட்களில் மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 20 நாட்களில் ரூ. 98 கோடி வரை படம் வசூலித்துள்ளதாம்.
