Delivery Boy திரை விமர்சனம்

நானி இயக்கத்தில் லியோ சிவகுமார், ப்ரகிடா நடிப்பில் சிறு பட்ஜெட்டில் சூப்பர் ஆக்‌ஷன் படமாக எடுக்க முயன்ற இந்த டெலிவரி பாய், எதிர்பார்த்த ஆக்‌ஷன் விருந்தை தந்ததா? பார்ப்போம்.

Delivery Boy திரை விமர்சனம் | Delivery Boy Movie Review



கதைக்களம்



நாயகன் சிவா(லியோ சிவகுமார்) எப்படியாவது போலீஸாக வேண்டும் என்று போராடி வருகிறார், அதே நேரத்தில் டெலிவரி பாய்-ஆகவும் அன்றாட தேவைகளுக்காக வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த நேரத்தில் தன் அம்மாவிற்காக சிவா ஒரு இடத்தில் திருடும் நிலை உருவாக, தன் தேவை முடிந்ததும் அந்த பணத்தை உரியவரிடமே ஒப்படைக்க செல்கிறார்.

Delivery Boy திரை விமர்சனம் | Delivery Boy Movie Review


ஆனால், அதற்கு அவர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அந்த பிரச்சனையை தன் பிரச்சனையாக்கி ஆக்‌ஷனில் இறங்குகிறார் லியோ சிவகுமார்.

இதை தொடர்ந்து சிவா போலீஸ் ஆனாரா, அந்த கேங்-ஐ சமாளித்தாரா என்ற ஆக்‌ஷன் களமே மீதிக்கதை.


படத்தை பற்றிய அலசல்



லியோ சிவகுமார் ஹீரோவாக தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார், அதிலும் குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார், ப்ரகிடாவுடனான காதல் காட்சிகளிலும் நன்றாகவே நடித்துள்ளார்.



இவரை தாண்டி ராதிகா வழக்கம் போல் தன் யதார்த்த நடிப்பில் கவனம் ஈர்க்கிறார், மேலும் ப்ரகிடா, ஜென்சன் இவர்களை விட வில்லன் கேங்-இல் வரும் அனைவரும் பேர் மிரட்டியுள்ளனர்.

Delivery Boy திரை விமர்சனம் | Delivery Boy Movie Review





படத்தின் முதல் பாதி, எல்லாம் குறிப்பாக நாயகன் அந்த பிரச்சனையில் சிக்கும் வரை, கொஞ்சம் சுமாராகவே செல்கிறது; ஆக்‌ஷன் களத்தை தொட்டத்தும் குறிப்பாக இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவே செல்கிறது.


அதிலும் ஒரு சில இடங்களில் நமக்கு நான் மகான் அல்ல போன்ற படங்களை கூட நினைவுபடுத்துகிறது. அதே நேரத்தில் அடுத்தடுத்து சில காட்சிகள் கொஞ்சம் கணிக்கும்படியாகவே இருந்தது. டெக்னிக்கலாக கண்டிப்பாக இந்த பட்ஜெட்டிற்கு தரமானதாகவே உள்ளது.



க்ளாப்ஸ்



  • நாயகன் லியோ சிவகுமார்

  • இரண்டாம் பாதி குறிப்பாக கிளைமேக்ஸ் பதட்டம்


பல்ப்ஸ்



  • முதல் பாதியில் இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருக்கலாம்.


மொத்தத்தில் இந்த டெலிவரி பாய் கண்டிப்பாக ஆக்‌ஷன் ரசிகர்களை ஏமாற்றமாட்டார்.

Delivery Boy திரை விமர்சனம் | Delivery Boy Movie Review

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *