15 வருடங்களுக்கு பின் இணைந்த கரீனா கபூர்


Shah Rukh Khan & Kareena Kapoor Daddy cool song: ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் இருவரும் 15 ஆண்டுகளுக்கு பின் கிங் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் டாடி கூல் பாடலில் கரீனா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.



கிங்



சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கிங். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

15 வருடங்களுக்கு பின் இணைந்த கரீனா கபூர் - ஷாருக்கான் ஜோடி.. கிங் படத்திலிருந்து வெளியான டாடி கூல் பாடல் | Shah Rukh Khan Kareena Kapoor Daddy Cool Song


மேலும், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அனில் கபூர் என பாலிவுட் திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

15 வருடங்களுக்கு பின் இணைந்த கரீனா கபூர் - ஷாருக்கான் ஜோடி.. கிங் படத்திலிருந்து வெளியான டாடி கூல் பாடல் | Shah Rukh Khan Kareena Kapoor Daddy Cool Song



டாடி கூல் பாடல்


கிங் திரைப்படத்தின் ப்ரோமோஷன் தொடங்கிய நிலையில், இப்படத்திலிருந்து டாடி கூல் பாடலின் கிங் வெர்ஷன் வெளியாகியுள்ளது. இதில், 15 ஆண்டுகளுக்கு பின் ஷாரூக்கானுடன் இணைந்துள்ளார் நடிகை கரீனா கபூர். இதற்கு முன் 2011ஆம் ஆண்டு வெளியான ரா ஒன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் தற்போது பட்டிதொட்டி எங்கும் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *