ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கிறது? X விமர்சனம்


Octopus web series X review: அர்ச்சனா ரவிச்சந்திரன் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆக்டோபஸ் வெப் தொடரை பார்த்தவர்கள் X-ல் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று அவர்களின் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.


ஆக்டோபஸ் வெப் தொடர்


கொரோனா அலைக்கு பின், ஓடிடி தளங்கள் மீது ரசிகர்களின் கவனம் அதிகமாக, தமிழில் இருந்து பல வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. விலங்கு, சூழல் 1 & 2, பேப்பர் ராக்கெட், வதந்தி 1 & 2 உள்ளிட்ட பல கதைக்களங்களில் வெளியான வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கிறது? X விமர்சனம் | Octopus Web Series X Review

இந்த நிலையில், நேற்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் வெப் தொடர்தான் ஆக்டோபஸ். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் இந்த வெப் தொடரில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் அஸ்வின் குமார், கலைவாணி, சரித்திரன், வினோத் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். 7 எபிசோடுகள் அடங்கிய இந்த வெப் தொடரை ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கியுள்ளார்.



X-ல் ரசிகர்களின் விமர்சனம்



இந்நிலையில், ஆக்டோபஸ் வெப் தொடரை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கிறது? X விமர்சனம் | Octopus Web Series X Review

இதில், “மிஸ்டரி த்ரில்லரான இந்த ஆக்டோபஸ் வெப் தொடரில் ட்விஸ்ட் சூப்பர், விஷுவல் சிறப்பு, ஆனால் லாஜிக் மிஸ்ஸிங். முதல் 3 எபிசோடுகளில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன, ஆனால் 3-வது எபிசோடின் இறுதியிலிருந்து கதை விறுவிறுப்படைகிறது. 5, 6 மற்றும் 7-வது எபிசோடுகள் நன்றாக உள்ளன; இதில் இறுதி எபிசோடுதான் சிறப்பம்சமாக அமைகிறது. ABOVE AVERAGE! மற்றும் A DECENT WATCH” என பெரும்பாலும் கூறியுள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *