13 நாள் முடிவில் அதர்வாவின் இதயம் முரளி செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

இதயம் முரளி
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் கடந்த ஜுலை 10ம் தேதி வெளியான திரைப்படம் இதயம் முரளி.
அதர்வா, ஃபகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடிக்க இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. காதல், நகைச்சுவை, எமோஷ்னல் காட்சிகள் என படம் தயாராகி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் அடுத்த மாதம் ஓடிடி ரிலீஸ் என கூறப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.
பாக்ஸ் ஆபிஸ்
படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.
இப்படம் 13 நாள் முடிவில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.






