வசூல் சாதனை செய்யும் இருமுடி.. மாஸ் காட்டும் ரவி தேஜா
கடந்த வாரம் வெளிவந்த இருமுடி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இருமுடி
ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், கடந்த 4 நாட்களில் உலகளவில் இருமுடி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.
