ஜெயிலர் 2 படத்தில் வேறு ஒரு படத்தின் யுனிவர்ஸ் வருகிறதா, சுவாரஸ்ய தகவல்
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் முதல் பாகத்தை போலவே ஆல் டைம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதற்கு ஏற்றது போலவே படத்தின் முன்பதிவும் முதல் நாள் ரூ. 60 கோடிகளை தாண்டிவிட்டது, மொத்த முன்பதிவு ரூ. 80 கோடிகளுக்கு மேல் உள்ளது.
யுனிவர்ஸ்
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நெல்சன் தான் இயக்கி மெகா ஹிட் ஆன டாக்டர் படத்தின் யுனிவர்ஸை இணைத்துள்ளதாக ஒரு செய்தி கசிகிறது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
அதே நேரத்தில், பீஸ்ட் படத்தில் டாக்டர் படத்தில் வந்த இரண்டு கதாபாத்திரத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் கேள்விபட்ட டாக்டர் யுனிவர்ஸ் ஜெயிலர் 2-வில் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
