வீட்டிற்கு வந்த ராவணனை கெத்தாக லாக் செய்யும் சக்தி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, தமிழ் சின்னத்திரையில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல்.
கதையில் இதுவரை குணசேகரன் தான் கொடூர வில்லனாக இருந்து வந்தார்.
இப்போது அவரை அழிக்கவே ஒரு கொடூரமான வில்லன் ராவணன் களமிறங்கி கதையையே மாற்றி வருகிறார். ஜனனி-சக்தியை குடும்பத்தினர் ஒதுக்க வைத்து குணசேகரன் மற்றும் குடும்பத்தினரை தனது கைக்குள் போட்டு வைத்துள்ளார்.
இதற்கு இடையில் ஜனனிக்கு தன்னைப்பற்றி தெரிய கூடாது என்றும் தர்ஷினி கடத்தல் விஷயத்தில் மாட்டிக்கொள்ள கூடாது என நிறைய பிளான்கள் போட்டு வருகிறார் ராவணன்.
புரொமோ
சக்தியை தேடிச்சென்ற ராவணனுக்கு சக்தி சரியான பதிலடி கொடுத்து அனுப்பினார்.
அவரிடம் அடிவாங்கிய ராவணன் குணசேகரனிடம் ஜனனி ஏதோ பிளான் செய்கிறார் என ஏற்றி விடுகிறார்.
பின் வீட்டிற்கு வந்த சக்தியை எங்கே சென்றாய் என அனைவரும் கேட்க அவர் ராவணனை பார்த்து நான் எங்கே சென்றேன் என கேட்கிறார்கள், சொல்லவா என கேட்ட அவரை லாக் செய்கிறார்.
இதோ எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் புரொமோ,
